மனைவி இன்றிரவு உங்களோடு உடலுறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு உணர்த்துவார்கள். உடலுறவில் ஈடுபட ஆண்களுக்கு தான் ஆசை தோன்றும் என நினைப்பது தவறு. ஆண்களை விட பெண்கள் தான் உடலுறவில் ஈடுபட மிகுந்த ஆசை கொண்டவர்கள் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் பெண்களை கடவுளுக்கு இணையாக பார்க்கிறார்கள்.
இதனால் அவர்கள் தன் உணர்வை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை. உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறான செயல் அல்ல. இது மனிதர்கள் மற்றும் மிருகங்கள் என அனைவருக்கும் தோன்றும் சாதாரன உணர்வு தான். அந்த வகையில் வெளிப்படையாக சொல்ல முடியாத பெண்கள், அதை ஒரு சில அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இதில்,
1. உங்கள் துணை, உங்களை நேருக்கு நேர் பார்த்த படியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்படி பார்ப்பார்கள்.
2. நீங்களும் உங்கள் துணைவியும் இரவு பேசிக் கொண்டிருக்கும் போது, உங்கள் பேச்சை கவனிக்காதது அவ்வப்போது பெருமூச்சு விடுவார்கள்.
3. அவர்கள் உங்களை கட்டி அணைக்க வேண்டிய கைகளால் தன்னை தானே கட்டிபிடித்து அமர்ந்திருப்பது, தனிமையில் விடப்பட்டது போல கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பார்கள்.
4. நீங்கள் உங்கள் துணையுடன் படுக்கையறையில் உடனிருக்கும் போதும், அவர்கள் தனக்கு தானே உளறிக்கொள்வார்கள்.
பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான ஆசைகளை தங்கள் கணவருக்கு மறைமுகமாகதான் உணர்த்துவார்கள். அதை ஆண்கள் நாசூக்காக புரிந்து கொண்டால், பிறகு என்ன அன்றைய இரவு சிவராத்திரி தான்.