மதுபோதையில் மோட்டார் சைக்கிள், வைக்கோல் மற்றும் செடி படப்புகளை எரித்து குடிமகன் அட்டகாசம்.
சங்கரன்கோவில் அருகில் இருக்கும் மேலநீலிதநல்லூர் சேர்ந்தவர் ஜெயராமன். நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய இவர் எப்போதும் போல் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மது போதையில் இருந்த காரணத்தினால் ஜெயராமின் மோட்டார் சைக்கிள் என்றும் பாராமல் நெருப்பு வைத்து எரித்துள்ளார். இதில் ஜெயராமனின் மோட்டார்சைக்கிள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் இருந்த வைக்கோல் மற்றும் செடி படப்புகளுக்கும் ஜெயராஜ் நெருப்பு வைத்துள்ளார். இதனை அறிந்து ஜெயராமன் பனவடலி சத்திரம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஜெயராஜை கைதுசெய்துள்ளனர்.