Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி…. திடீரென இப்படி ஆயிட்டு…. பின் நடந்த சம்பவம்….!!

தென்னை மரத்தில் ஏறியபோது தொழிலாளி திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ராகரம் நாட்டான்வட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் தென்னை மரங்களை அபிமன்னன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறிப்பதற்காக அந்தியூர் பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி ராமன் என்பவரை அழைத்து வந்தனர். அப்போது அவர் 4 மரங்களில் தேங்காய் பறித்து விட்டு 60 அடி உயரமுள்ள 5-வது தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க காலில் அணியும் மெட்டு மற்றும் இடுப்புக்கு பெல்ட் அணிந்துகொண்டு மரத்தில் ஏறியுள்ளார்.

இதனையடுத்து 60 அடி உயரத்தில் ஏறும்போது ராமன் திடீரென மயக்கம் ஏற்பட்டு அதே மரத்தில் மயங்கிய நிலையில் தொங்கினார். இதுகுறித்து அபிமன்னன் மற்றும் பொதுமக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு துறை அலுவலர் மணிகண்டன் தலைமையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1/2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராமனை பத்திரமாக மீட்டுள்ளனர். அதன்பின் ராமன் சிகிச்சைக்காக புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Categories

Tech |