Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை…!!

தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் வரலாறு காணாத வகையில் பெய்த கன மழையால் பல வீடுகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலையில் ஆறாக ஓடிய வெள்ள நீரில் சிலர் அடித்துச் செல்லப்பட்டனர். பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.

தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 4 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பலியாகியுள்ளதாகவும் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு ரேஷன் பொருட்களும், மூன்று போர்வைகளும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஹைட்ரபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அம்மாநில மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Categories

Tech |