Categories
தேசிய செய்திகள்

அவங்கள புடிங்க… மாடுகள திருடிட்டு போறாங்க… சந்தேகத்தில் 3 இளைஞரை அடித்தே கொன்ற கிராம மக்கள்… சோகம்…!!!

கால்நடைகளை திருடி செல்வதாகக் கூறிய மூன்று நபர்களை கிராம மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம் கொவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் சிறிய சரக்கு வாகனத்தில் 5 கால்நடைகளை ஏற்றி மூன்று இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதை பார்த்த அந்த கிராம மக்கள் கால்நடைகளை திருடி செல்வதாக சந்தேகம் அடைந்தனர். உடனே அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று பக்கத்து கிராமத்தில் வைத்து அதை மடக்கி பிடித்து வாகனத்தில் இந்த மூன்று பேரையும் இழுத்து அடித்து உதைத்தனர். இரண்டு பேர் மயங்கி சரிந்து விழுந்த நிலையில், ஒருவர் தப்பி ஓடினார்.

அவரை மடக்கிப்பிடித்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் 3 பேரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், இது சம்பந்தமாக யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உண்மையில் கால்நடைகளை திருடி சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |