Categories
உலக செய்திகள்

ரூ.1.5 கோடி முக கவசங்கள் திருட்டு…! இங்கிலாந்தில் துணிகர திருட்டு…!!

சுகாதார ஊழியருக்கு வழங்க சேமித்து வைக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான முகக் கவசங்கள் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இங்கிலாந்தின் சிறப்புமிக்க தொழில் நகரமான மான்செஸ்டரின் புறநகர் சல்போர்ட். இங்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தேசிய சுகாதார ஊழியர்களுக்கு வழங்க இருந்த 1.5 கோடி ருபாய் மதிப்பிலான 80,000 முகக்கவசங்கள் அங்கிருக்கும் மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் 3 பேர் நள்ளிரவு 3 மணிக்கு வேனில் குடோனுக்குள் புகுந்து சேமித்து வைத்த 80,000 முக கவசங்களையும் திருடிச் சென்றுள்ளனர். சுகாதார பணியாளர்களுக்கு தேவைப்படும் சுய பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இருக்கும் நிலையில் அவர்களுக்கு என்று சேமித்து வைத்த 80,000 முகக் கவசங்கள் திருடுபோனது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அதிக பாதுகாப்பு நிறைந்த இடத்தில் இந்த திருட்டு நடைபெற்றிருப்பது மான்செஸ்டர் நகர காவல்துறையினருக்கு சவால் விடுவதாய் அமைந்துள்ளது.

Categories

Tech |