ஜெர்மனியில் பொது கழிவறைகளில் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டுளனர்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் பொது கழிவறைகளை பயன்படுத்துவதற்கு 0.50 யூரோக்கள் செலுத்த வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் மட்டுமே 500 கழிவறைகளில் திருட்டு சம்பவம் நடந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பெர்லினில் கடந்த புதன்கிழமை அன்று கழிவறைகளில் திருடிய 3 பேர் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து நாணயங்கள், ஸ்குரூடிரைவர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவர் கழிவறைகளில் திருடி கொண்டிருக்கும் போது சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து அதிக அளவில் நாணயங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் ஐவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.