Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட சத்தம்…. கண்விழித்த காவலாளி…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சாலடியூர் பகுதியில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடையானது  ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் சந்தானகிருஷ்ணன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சந்தானகிருஷ்ணன் பணியில் இருந்தபோது திடீரென அதிகாலை 3 மணிக்கு கடையின் பின்புறம் இருந்து சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு சந்தானகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது டாஸ்மாக் கடையின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டுள்ளார்.

இதுகுறித்து சந்தானகிருஷ்ணன் உடனடியாக பாவூர்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் டாஸ்மாக் கடையை பார்வையிட்டுள்ளனர். அப்போது அந்த கடையில் இருந்த 16 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் அப்படியே இருந்தபோதிலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |