சேலம் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் பணம் மட்டும் நகையை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரோசி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 3 பவுன் நகைகள் மற்றும் 10,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருந்த ஒருவரின் வீட்டிலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுக்குறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.