Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த அட்ரஸ் எங்க இருக்கு….? உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி 3 பேர் பணம் மற்றும் மடிக்கணினியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள இரஞ்சிதபுரம் பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கணினியில் சர்வீஸ் மையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிராங்கிளின் முதலியார் சரித்திரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் சுப்பிரமணியபுரம் செல்வதற்கான வழியை கூறுமாறு பிராங்கிளினிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து திடீரென பிராங்கிளினை தாக்கி அவரிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பிராங்கிளின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |