பெட்டிகடையில் 10,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வழுதூர் வாலாந்தரவையில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெட்டிக் கடையை வழுதூர் விலக்கு ரோட்டில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் சென்று கடையை பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாயை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைமணி இச்சம்பவம் குறித்து உடனடியாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.