Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது வழியாவா போயிருக்காங்க… அதிர்ச்சி அடைந்த மேலாளர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

ஜன்னல் கம்பியை அறுத்து ஷோரூமின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 12 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஷோரூமில் ரமேஷ் பாபு என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் காவலாளி கழிவறைக்கு சென்றதை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் ஷோரூமில் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் உள்ளே இருந்த 12 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாயை மர்ம நபர்கள் திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து மறுநாள் ஷோரூமுக்கு சென்ற ரமேஷ்பாபு பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சிங்காநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |