ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுநகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள கிடங்கிலிருந்து ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி உள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினகரன் கத்தி கூச்சலிட்டு உள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் மோட்டார்சைக்கிளில் அந்த 3 நபர்களும் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் தினகரன் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரும்பு பொருட்களை திருடி சென்ற அந்த 3 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.