Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காவல் அதிகாரி வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை

காவல் அதிகாரி வீட்டில் நகை திருட்டு போனது தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்துள்ளது ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ரயில்வே பாதுகாப்பு பணியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகனின் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க குடும்பத்தினருடன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் உள்ளே குடும்பத்தினர் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை போன சம்பவம் அறிந்து ராஜாக்கமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |