Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்பத்துடன் திருமண விழாவிற்கு சென்று விட்டு திரும்புகையில் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்காக கடந்த 18ம் தேதி வெளியூர் சென்றுள்ளார். பிறகு திருமண விழா முடிந்து 19 ஆம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 32 பவுன் தங்க நகை மற்றும் வைரத்தால் ஆன மோதிரம் கம்மல் போன்ற பொருட்கள்  காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சீனிவாசன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த கைரேகை நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |