Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரு வழியாக மாற்ற நடவடிக்கை…. சாலையோரம் ஆக்கிரமிப்பு…. பொறியாளர் ஆய்வு….!!

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மண்டல பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கூட்டுரோடு பகுதியில் ஏலகிரி மலை சாலை பிரிகிறது. இந்நிலையில் ஏலகிரி மலைக்கு செல்லும் சாலை குறுகியதாக இருக்கின்றது. இதனால் அச்சாலையில் விடுமுறை நாட்களிலும் மற்றும் கோடை விழா நடக்கும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசல், விபத்தை தடுக்க அதிகாரிகள் மலையின் அடிவாரத்திலிருந்து பொன்னேரி கூட்ரோடு வரை இரு வழிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிறகு அதற்கான நிதி ஒதுக்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சாலை விரிவாக்கப் பணி தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. இதனை அடுத்து பொன்னேரி கூட்ரோடு பகுதியில் இருந்து சின்ன பொன்னேரி வரை ஏலகிரி மலைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரம் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றவதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றவில்லை. பின்னர் சாலை விரிவுபடுத்துவதற்காக வெட்டப்பட்ட பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக செய்தி வெளியானதும், இம்மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர் லோகநாதன் பொன்னேரி பகுதியில் சாலை விரிவாக்கப் பணியை ஆய்வு செய்துள்ளார். அந்நேரம் அவர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதன் பேரில் சாலையோரம் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |