Categories
உலக செய்திகள்

உலக நாடுகளே உஷார்… வேகமெடுக்கும் கொரோனா… மீண்டும் எச்சரிக்கை..!!

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2,698 பேர் உயிரிழந்தனர். மேலும்  80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் சீன பெருஞ்சுவரை தாண்டி 28 நாடுகளில் பரவி இருக்கின்றது.  தற்போது கொரோனா வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ஆம், தென்கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூரில் மக்களை வேகமாக காவு வாங்கி வருகிறது. இதனால் அந்த நாடுகள் அனைத்தும் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நாட்டை தவிர்த்து மற்ற நாடுகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லையென்றாலும், கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் கொரோனா வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்துமே அதனை கட்டுப்படுத்தும் முயற்ச்சியில் தான் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அழையா விருந்தாளியாக, கொரோனா கதவை தட்டும் ஆபத்து உள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

மேலும் தற்போது சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு வலுவடைந்து வரும் சூழலில், அதன் தாக்கம், உலக நாடுகளிலும், மிக கடுமையாகவே எதிரொலிக்கும் ஆபத்து இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு அடிக்கடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |