பெண்ணின் இதயத்தை எடுத்து உருளைக்கிழங்கோடு சேர்த்து சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் பக்கத்து வீட்டு பெண் ஒருவரை கொன்று அவருடைய இதயத்தை எடுத்து உருளைக்கிழங்கோடு சேர்த்து சமைத்து தன்னுடைய குடும்பத்தினருக்கு உணவாக வழங்கியது மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரையும் கத்தியால் குத்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஆண்டர்சன் என்பவர் தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணான ஆண்ட்ரியா லின் என்பவரை வீட்டில் வைத்தே கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஆண்டர்சன் தன்னுடைய மாமா, மாமனாரின் பேத்தியான 4 வயது சிறுமி, அத்தை ஆகியோரையும் கத்தியால் குத்தியுள்ளார். ஆனால் இவர்கள் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து ஆண்டர்சனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண்ணை கொன்று இதயத்தை சமைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.