Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… மர்ம நபர் செய்த காரியம்… தொடர்ந்து அதிகரிக்கும் குற்றங்கள்…!!

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் உள்ள தெற்குவாடி புது தெருவில் பூமாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பூமாதேவி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான மானாமதுரைக்கு செல்வதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் மிகவும் கூட்டமாக இருந்ததால் அதனை பயன்படுத்திய மர்மநபர் யாரோ பூமாதேவி அணிருந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதனைதொடர்ந்து சங்கிலியை இல்லாததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இதுபோன்ற சங்கிலி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் திருட்டு கும்பலை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |