நாகர்கோவிலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சந்தேகப்படும் வகையில் உயிரிழந்தார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கூடங்குளத்தில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த மாதம் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருக்கும் கிறிஸ்டோபரை காவலர்கள் தேடிவந்தனர். அவரது கைபேசி விவரங்களை ஆராய்ந்து பார்த்தபோது கிறிஸ்டோபர் கருங்கல் பகுதியை சேர்ந்த லீலாபாய் என்பவரிடம் போனில் அதிக முறை பேசியது தெரியவந்தது.

பின்னர் லீலாபாயை கைது செய்து நேற்று மாலை வள்ளியூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். இரவிலும் விசாரணை நடந்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை லீலா பாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்கு நாகர்கோவில் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் அந்த பெண் உயிரிழந்தார்.