பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் இருந்து தாலி செயினை திருடர்கள் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பக்கத்தில் உள்ள புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுமார் 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் விஜயாவிடம் வந்து சிகரெட் வாங்கி உள்ளார். இன்னொருவர் இருசக்கர வாகனத்தில் பெட்டிக்கடைக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது சிகரெட் கேட்ட அந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை விரட்டி பிடிப்பதற்காக அவர் பின்னால் துரத்திச் சென்று உள்ளார். ஆனால் அந்த நபர் உடன் வந்திருந்த நபருடன் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தற்கொலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் தப்பிச் சென்ற திருடர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.