Categories
உலக செய்திகள்

10 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்… உடலுக்குள் நுழைந்த நீள கம்பி… ஸ்கேன் செய்து வியந்த மருத்துவர்கள்… நம்பமுடியாத சம்பவம்..!!

நீளமான கம்பி பெண்ணின் உடல் உள்ளே சென்றும் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

சீனாவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயம் சியான் என்ற பெண் 10 அடி உயரத்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து கம்பி ஒன்று அவரது உடலின் உள்ளே நுழைந்து விட்டது. இதனால் உடன் பணி புரிந்தவர்கள் உடனடியாக கம்பியை அறுத்து அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உடலின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்து இருந்த அந்த கம்பியானது அந்தப் பெண்ணின் உடலில் உள்ளுறுப்புகளையும் முக்கிய ரத்தக் குழாய்களையும் சேதப்படுத்தாமல் இருந்தது.

இதனைப் பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த கம்பியை மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பெண்ணின் உடலிலிருந்து அகற்றினர். தற்போது அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு நீளமான கம்பி உடலுக்குள் சென்றும் அந்தப் பெண் உயிர் பிழைத்தது அற்புதமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.

Categories

Tech |