காஜல் அகர்வால் தான் அடுத்த படத்தில் யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார் என்ற தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது இந்தியன்2 , பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வால், தான் அடுத்ததாக பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தனது நீண்ட நாள் ஆசை என்றும் அது தற்போது நிறைவேறப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.