குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவரை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குருப்பனூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி முருகன் என்பவரது மகன் வெங்கடேசன்.. 30 வயதுடைய இவரும் கூலி வேலை செய்து வருகின்றார்.. வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சுகந்தி (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்..
மேலும், வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்துவந்துள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், குடிப்பதற்கு பணம் இல்லாமல் அடிக்கடி மனைவியிடம் பணம் தருமாறு கேட்டு சண்டை போட்டு வந்தார்.
இந்தநிலையில், குடித்து விட்டு வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மேலும் மது குடிக்க அவரது மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்ய, அவர் கொடுக்க மறுத்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சுகந்தி குடிபோதையிலிருந்த தன்னுடைய கணவன் வெங்கடேசன் தலைமீது ஓங்கி கல்லைப் போட்டதுமட்டுமில்லாமல் கத்தியை எடுத்து சதக் சதக் என குத்தியுள்ளார்.
இதில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்து சேலம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..