Categories
தேசிய செய்திகள்

“கள்ளக்காதலனுடன் தனிமையிலிருந்த மனைவி”….. நடு ரோட்டில் தர்ம அடி கொடுத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி ஊர் தலைவருடன் ஹோட்டலில் ஒன்றாக இருக்கும்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து நடு ரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார். அதன் பிறகு அமன் தன்னுடைய மனைவி மற்றும் ஊர் தலைவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மனைவி நீண்ட நாட்களாக இதை செய்துவரும் நிலையில், என்னுடைய நண்பர்கள் உதவியுடன் இன்று தான் கையும் களவுமாக பிடித்துள்ளேன்.

என் மனைவி என்னை கொன்று விடுவதாக மிரட்டுவதோடு, பல சந்தர்ப்பங்களில் என் மீது பழியையும் போடுகிறார் என்று கூறியுள்ளார். இது குறித்து அமன் மனைவி கூறும் போது, என்னுடைய கணவர் தான் என்னை ஹோட்டலுக்கு அழைத்து வந்து வழக்கை முடிக்க சொல்லி ஊர் தலைவரிடம் பேசுமாறு சொன்னார் என்று போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு ஊர் தலைவர் வழக்கு பற்றி பேசுவதற்காக தான் ஹோட்டலுக்கு சென்றதாகவும், அவருடைய மனைவியுடன் நான் தனி அறையில் இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதோடு நடுரோட்டில் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |