கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூம்பாறையைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் நெருக்கமாக பழகினார். இவருக்கு 57 வயது ஆகிறது. நாளடைவில் அது காதலாக மாறியது. பின் ராணி இரண்டாவதாக அவரை திருமணம் செய்து கொண்டார். செல்வத்திற்கும் ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.
இந்நிலையில் செல்வத்துக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது மனைவிக்கு தெரியவர, அவர் கணவனை கண்டித்துள்ளார். ஆனால் செல்வம் கைவிட மறுத்த காரணத்தால் ராணி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை கண்ட அவரது கணவர் செல்வம் பதறிப்போய் காப்பாற்ற முயற்சி செய்தார். இதில் இரண்டு பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு, கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர்கள் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் ராணியை காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். செல்வம் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின்படி கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.