நட்சத்திரம் நகர்கிறது படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனர் ரஞ்சித்தின் மனைவி அறிமுகமாகிறார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது இவர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் ரஞ்சித்தின் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு இயக்குனர் ரஞ்சித்துக்கு நன்றி” தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Finally and it’s a wrap, #natchathiramnagargirathu Thankyou sooo much dear❤️@beemji for this 1st opportunity ,it’s great to work with you after the college period,and thanks to @officialneelam @YaazhiFilms_ All the teams and my one and only Assit @TamilStylist 👍💫 pic.twitter.com/wPDPzvU5O1
— Anitha (@ANITHAera) January 5, 2022