Categories
தேசிய செய்திகள்

பகீர்!… கணவனை‌ கொன்று 22 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி….. டெல்லியில் மீண்டும் அரங்கேறிய ஷ்ரத்தா சம்பவம்…..!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் தேடிய சில உடல் பாகங்கள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்களை ஷ்ரத்தா டிஎன்ஏ உடன் மேட்ச் செய்து பார்த்த போது அது பொருந்தவில்லை. இதனால் அந்த உடல் பாகங்கள் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, டெல்லியில் உள்ள பாண்டவ் நகரில் அஞ்சன தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பூனம் (48) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதில் அஞ்சன தாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதில் 8 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் பிகாரில் வசித்து வருகிறார்கள். இதேபோன்று பூனமுக்கும் இரண்டாவது திருமணம் தான். ஏற்கனவே திருமணமானதில் தீபக் என்ற மகனும் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அஞ்சன தாஸ் தீபக்கி ன் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தவுடன் அவரிடம் தவறான முறையில் அனுகவும் செய்துள்ளார். இதேபோன்று பூனமின் மகளிடமும் அஞ்சன தாஸ் தவறான முறையில் அணுகியதாக கூறப்படுகிறது. அதோடு வேலைக்கு செல்லாமல் அஞ்சன தாஸ் வீட்டில் இருந்ததோடு, பூனம் நகைகளை விற்று முதல் மனைவிக்கு அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பூனம் மற்றும் தீபக் ஆகிய இருவரும் இணைந்து அஞ்சன தாஸை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அவரது உடலை 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜுக்குள் வைத்து இரவு நேரத்தில் பல இடங்களில் வீசியுள்ளனர். கடந்த மே மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் போலீசார் விசாரணையில் தெரிய வரவே பூனம் மற்றும் தீபக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |