உத்தரபிரதேசத்தில் ரூபாய் 10,000 த்திற்கு தந்தையால் விற்கப்பட்ட விதவை பெண் பல முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர் மறைவுக்கு பின்னர் அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ஒரு நபருக்கு ரூ.10,000 த்துக்கு விற்றனர். வாங்கியவர் தனது நண்பர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு அந்த பெண்ணை வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் வீட்டு வேலைக்கு சென்ற அந்த விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. இதே போல் பல முறை அப்பெண் கற்பழிக்கப்பட்டு கடும் சித்ரவதைக்கு ஆளானார்.
இதையடுத்து கற்பழிப்பு தொடர்பாக அந்த பெண் ஹாபூர் பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் அவரின் புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் புகார் அளித்தது. இதையடுத்து இந்த புகாரின் படி ஹாபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.