பருவமழை காரணத்தால் ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தல் தென்மேற்கு பருவமழை காரணத்தால் அதிக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணை வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை காரணத்தால் அணைகள் வினாடிக்கு 8, 586 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக அதிகரித்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றிலிருந்து நீர்வரத்து பிலிகுண்டுலுவிற்கு செல்வதை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.