Categories
அரசியல் மாநில செய்திகள்

போர் தொடங்கியாச்சு…. எழுச்சி வந்துடுச்சு…. சிக்னல் கொடுத்த தலைவர் …!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில்… தேர்தல் களத்தில் இறங்வேன் என்று நடிகர் ரஜினி கூறி 3 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை அரசியல் கட்சி தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. இதற்க்கு முன்பு சென்னையில் ரசிகர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், எனக்கு முதல்வராக விருப்பமில்லை என்றும், தான் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்றெல்லாம் பேசினார்.

மேலும் மக்களிடையே ஒரு எழுச்சி வர வேண்டும், அந்த எழுச்சி வந்த பிறகு நான் அரசியலுக்கு வருகிறேன் என்றெல்லாம் தெரிவித்து கொண்டார். இந்த நிலையில்தான் தற்போது ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

வருகின்ற பிப்ரவரி 21 பிப்ரவரி மாதத்தில் அரசியல் கட்சி தொடங்கப்படும் எனவும், தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கட்சி அறிவிப்பு குறித்து ரஜினி தரப்பில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் இது ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |