Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ”காத்து வாக்குல ரெண்டு காதல்” படக்குழு…. எப்படின்னு பாருங்க….!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் சமந்தா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த போஸ்டரில் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்கில் இந்த படம் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளனர். சமீபத்தில், இந்தப் படம் நேரடியாக OTT யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |