Categories
அரசியல்

திராவிட இயக்கத்தின் குரலாய் கனிமொழி …… வைகோ புகழாரம்….!!

நாடளுமன்றத்தில் திராவிட இயக்கத்தின் குரலாய் கனிமொழி ஒலிப்பார் என்று மதிமுக செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் வாழ்த்து பெற்றார்.

Image result for வைகோ கனிமொழி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ , ஜனநாயகமா பாசிசமா இந்த கேள்வி தான் இந்த தேர்தலில் எழுந்திருக்கிறது . கஜா புயலில் உயிரிழந்தவர்களின் அனுதாபம் தெரிவிப்பதற்கு கூட நேரமில்லாத பிரதமர் . இந்தி , சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் நரேந்திர மோடி அரசு அகற்றப்படவேண்டும் . கனிமொழி அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டி போட்டு ஒரு இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவார். நாடாளுமன்றத்தில்  கனிமொழி தமிழகத்தின் குரலாய்   தமிழகத்தின்   திராவிட இயக்கத்தின் குரலாய்  ஒலிப்பார் என்று வைகோ கூறினார்.

Categories

Tech |