சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் அறிகுறிகள் மற்றும் அதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்..
இந்தக் கொரோன வைரஸ் பாம்பு மற்றும் வெளவால் மூலம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோன வைரசால் இது வரை 132 பேர் இறந்துள்ளனர். சுமார் 5974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டே நாட்களில் 65% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது. 20 நகரங்கள் உடனான போக்குவரத்து மூடப்பட்டுள்ளதால் சுமார் 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோன வைரசுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எச்ஐவி வைரஸ்க்கான மருந்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது என சீன சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வகையில் ஆஸ்ட்ரேலிய ஆய்வு கொரோன வைரஸின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது .கொரோன வைரஸின் தாக்கம் 14 நாடுகளில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஹாங்காங், தாய்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, மலேசியா ,சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், தைவந், கனடா, வியட்னாம், நேபாளம், ஜெர்மனி,
கொரோன வைரஸின் அறிகுறி
மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தும்மல், இருமல், தொண்டைவறட்சி , காய்ச்சல் ஏற்படும், ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே வைரஸ் பாதிப்பை தெரிந்து கொள்ள முடியும். வைரசால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கடுமையான சுவாசக் கோளாறு ஏற்படும். வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்
வைரஸில் இருந்து தப்பிப்பது எப்படி?
சத்துள்ள உணவு வகைகளை சாப்பிட வேண்டும், அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும், மூக்கு வாயை மறைக்கும் வகையில் முகமூடி அணிந்து கொள்வது நல்லது .கைகளை அவ்வப்போது சோப் போட்டு கழுவவேண்டும். கழுவாத கைகளால் கண், மூக்கு, வாய்யை, தொடக்கூடாது. இறைச்சி முட்டையை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். இறைச்சி கடைகளுக்கு சென்று வந்தால் கை கால்களை நன்றாக கழுவ வேண்டும் .கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்க்கவும். பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுதல் அவசியம். இருமல் ,தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சிறிது தூரம் இடைவெளி விட்டு இருத்தல் நல்லது