Categories
உலக செய்திகள்

அதிபர் வெளியிட்ட அறிவிப்பு… பிரபல நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்… அமெரிக்க தூதரகம் தகவல்..!!

அமெரிக்க அரசு 20 லட்சம் “மாடர்னா” தடுப்பூசிகளை “கோவேக்ஸ்” திட்டத்தின் கீழ் வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு சார்பில் உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அடுத்த 6 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் ஜான்சன் & ஜான்சன், பைசர், மாடர்னா உள்ளிட்ட அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளை பூட்டான், இந்தோனேசியா, வியட்நாம், நேபாளம், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக அமெரிக்கா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் 20 லட்சம் “மாடர்னா” தடுப்பூசிகள் அமெரிக்க அரசு சார்பில் இன்று வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வியட்நாமில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த தடுப்பூசிகள் அதிபர் ஜோ பைடன் அறிவிப்பின்படி “கோவேக்ஸ்” திட்டத்தின் கீழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |