ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று உபி அரசு அறிவித்துள்ளது..
ரக்ஷா பந்தன் என்பது சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான கயிற்றை அதாவது நூலை கட்டுவார்கள்.. இது ராக்கி என்று அழைக்கப்படுகிறது. ராக்கி கயிற்றை தனது உடன் பிறந்த சகோதரர்களுக்கு தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் கிடையாது.. நாம் சகோதரராக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் ராக்கியை கட்டலாம்.. இந்த பண்டிகை (ரக்ஷா பந்தன்) ஆகஸ்ட் 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது..
இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு அனைத்து வயது பெண்களும் அரசு பேருந்துகளில் ஒருநாள் மட்டும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்திலும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு அனைத்து வயது பெண்களும் அரசு பேருந்துகளில் ஒருநாள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.