Categories
சினிமா தமிழ் சினிமா

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு…. என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்….!!!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பிரபல நடிகை புதிதாக என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியல் தற்போது மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே ஒரு கொலையை வைத்து நீண்ட வாரங்களாக பல ட்விஸ்ட் காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

விறுவிறுப்பாக அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஏற்கனவே மாறன் என்ற கதாபாத்திரம் புதிதாக வர இருக்கிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை பிரேமி வெங்கட்டும் இந்த சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

அதன்படி இந்த சீரியலில் மகாலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரக்ஷிதாவுடன் பிரேமி வெங்கட் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/p/CSdgLpeBZgk/?utm_source=ig_embed&ig_rid=970455c4-24d7-4831-a39b-095cf281783b

Categories

Tech |