மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம், இன்றைக்கு அண்ணா திமுக இருக்கின்ற நிலைமையிலே இதற்கான அரசியல் பின் விளைவுகளை என்னால் கணிக்க முடியவில்லை. காரணம் அண்ணா திமுகவே இன்றைக்கு மூன்று பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது.
டிடிவி தினகரன் அவர்கள் தனிக்கட்சி இப்படியான சூழலில் அண்ணா திமுக ஓட்டு வங்கி நான்காக இருக்கிறது என்றுதான் நாம் கூற வேண்டும். 4 பிரிவுகளாக இருக்கின்ற ஓட்டு வங்கியில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, அவரது பகுதியில் ஆதரவு இருப்பதாக நாம் தெரிந்து கொள்ளலாம். எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இப்படியான சூழ்நிலையில் இந்த ஒரு அறிக்கை அல்லது இதன் மீதான சசிகலா மீதான குற்றச்சாட்டு என்பது அண்ணா திமுகவில் என்ன மாறுதலை ஏற்படுத்தும், ஓ பன்னீர்செல்வம் – திருமதி சசிகலா அவர்கள் திரு டிவி தினகரன் அவர்கள் இவர்கள் ஒரே அச்சில் வருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்துமா ?
அல்லது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நான் இதற்காகத்தான் விசாரணை ஆணையம் அமைத்தேன், இப்போது உண்மை வெளிவந்து விட்டது என்று கூறி மொத்த பலியையும் தூக்கி திருமதி சசிகலா அவர்கள் மீது போடுவாரா ? இதை எல்லாம் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பொறுத்தவரையில் ஆணையத்தை அமைத்தது தான் என்று அவர் கண்டிப்பாக அவர்கள் எடுத்துக் கொள்வார், அரசியல் ரீதியாக அப்படித்தான் சொல்லுவர். ஆனால் அவர் இன்று சட்டமன்றத்தில் இருந்து சந்தித்திருக்க வேண்டும். காரணம்…
இரண்டு ஆணையமும் அவர் அமைத்ததுதான். ஒரு ஆணையம் ஜெயலலிதா அவர்கள் மரணம் பற்றியது, இது பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும், ஒரு ஆர்வத்தையும், அதே நேரத்தில் பல மர்மங்களையும் உள்ளடக்கியது. எனவே அவர் சட்டமன்றத்தில் இருந்து அதை எதிர்கொண்டு இருந்தால் அவருக்கான அரசியல் அனுகூலமாக இருந்திருக்கும். ஆனால் அதை வேண்டும் என்று அவர் தவிர்த்தார் என்று தான் நான் நினைக்கிறேன்.