Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” கார் மீது ஏறிய லாரி…… 80 வயது முதியவர் உட்பட 2 பேர் பலி…… லாரி டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது வயது எண்பது. இவரும் பெரம்பலூரை சேர்ந்த ராஜராஜன் என்ற இளைஞரும் விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டி வந்தார்.

இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து விருத்தாசலத்துக்கு வந்து கொண்டிருந்த லாரி  எதிர்பாராதவிதமாக கார் மீது ஏறியதால் காரில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து லாரியில் இருந்து இறங்கி டிரைவர் தப்பி சென்றுவிட அதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் அவரது உடலை மீட்க முயற்சித்த பொழுது முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் தகவல் அறிந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து கதவை உடைத்து உடலை மீட்டனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பிச் சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |