Categories
தேசிய செய்திகள்

வனப்பகுதியில் கொடூரமாக குதறப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர்..!!

புல் பள்ளி அருகிலுள்ள வனப்பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள காட்டுநாயக்கர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் சிவக்குமார்.. 24 வயதுடைய இவர் நேற்று மாலை வீட்டை விட்டு சென்றார்.. ஆனால் இரவு நேரமாகியும் வீடு வந்து சேரவில்லை.. இதனால் பதற்றமடைந்த அவரின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..

இளைஞர் வசிக்கும் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீசார் வனத்துறையின் உதவியுடன் காணாமல் போன இளைஞரை வலைவீசி தேடினர்.. இந்தநிலையில், புல் பள்ளி அருகேயுள்ள  காட்டில் காணாமல் போன இளைஞர் சிவக்குமார் தலை மற்றும் பாதி கால்களுடன் சதை இல்லாமல் எலும்புக்கூடாக கிடந்தார்..

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்து போன போலீசார் உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலமாக மீட்கப்பட்ட இளைஞரை புலி அடித்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |