வெறிநாய் கடித்து நோய் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் மோனிஷ் என்ற 7 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்..
ரேபிஸ் தொற்று காரணமாக உயிரிழந்த சிறுவன் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.. மேலும் 5க்கும் மேற்பட்ட சிறுவர்களையும் வெறிநாய் கடித்து உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்..