கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (31)- சரண்யா (24) தம்பதியினர். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி தற்கொலை செய்துகொண்ட சோகத்தால் கடும் மன உளைச்சலுடன் இருந்த சிவகுமார் இன்று (ஜூலை 5) தற்கொலை செய்து கொண்டார். விடிந்து நீண்ட நேரமாகியும் சிவக்குமார் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிவகுமார் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி வைத்தனர்.. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.