Categories
தேசிய செய்திகள்

வீட்டைப் பூட்டிவிட்டு தாயை கொலை செய்த மகன்..!!

மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தன்னுடைய தாயை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ரித்தேஷ் என்பவர்  மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வாரணாசியிலுள்ள இவரது பாட்டியின் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.. இவரை பார்த்துக்கொள்ள ரித்தேஷின் அம்மா நிர்மலாவும் அங்கேயே இருந்துள்ளார்.

இந்தநிலையில், சோன்பந்த்ரா பகுதியில் உள்ள தந்தையை பார்ப்பதற்கு நிர்மலாவுடன் மகன் ரித்தேஷ் வந்துள்ளார்.. ஆனால், அவரது தந்தை வேறு சில வேலைகள் காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் நிர்மலா, ரித்தேஷ் இருவரும் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் கிளம்பலாம் என்று முடிவெடுத்துள்ளனர்..

அந்த நேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு தாய் நிர்மலாவை மகன் ரித்தேஷ் கொலை செய்துள்ளான்.. நிர்மலாவின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவுகளைத் திறப்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.. அதனைத்தொடர்ந்து தந்தை அங்கு வந்து நடந்த சம்பவத்தை அறிந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தபோது, நிர்மலா கொலை செய்யப்பட்டு கிடந்தார்..

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்கு  அனுப்பி வைத்தனர்.. அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரித்தேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே சொந்த தாயைக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |