ஆனால் நாட்டின் சில இடங்களில் அவலம் நடைபெற்று வருகிறது. அதாவது ஜே.சி.பி. மூலம் இறந்த நபர்களின் உடல்களை குழியில் தூக்கி வீசுவது, தரதரவென இழுத்துச் செல்வது, ஒரு குழியில் நிறைய பேரின் உடல்களை புதைப்பது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தநிலையில் தெலுங்கானாவில் ஆட்டோ ஒன்றில் வைத்து இறந்தவரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்ட அவல சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நிஜாமாபாத் அரசு மருத்துவமனை மருத்துவர் கூறுகையில் ‘‘கொரோனாவால் இறந்தவரது உறவினர் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அவர் எங்களிடம் உடலை நான் எடுத்துச் செல்கிறேன் என கூறினார். அவர் ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்கவில்லை’’ என்றார்.. இருப்பினும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் எடுத்துச் செல்லப்பட்டது கேள்வியை எழுப்பியுள்ளது.