இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 2- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நடைபெற்று வருகிறது இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் ஹாமில்ட்டனில் உள்ள செடன்பார்க்கில் இன்று பிற்பகல் 3-ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முயற்சி செய்யும் என்பதால், நியூசிலாந்து அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம். இதுவரையில் நியூசிலாந்து மண்ணில் நடந்த டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியதே கிடையாது என்பதால், இன்றைய போட்டியை வென்று கைபற்றி புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதே சமயம் சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் வீழ்ந்து விடக்கூடாது என்று தொடரை தக்கவைத்துக்கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி உள்ளதால், இந்தப்போட்டி இரண்டு அணிகளுக்கும் சவாலாக இருக்கும். ஆகவே இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.