Categories
தேசிய செய்திகள்

திருடபோன வீட்டில் வேறு பொருளை கண்டதும் அங்கேயே தங்கிய திருடன் … விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு  ஒன்றுக்கு திருடப் போன திருடன்  அங்கே தூங்கியதால் மறுநாள் காலை போலீசாரிடம்  வசமாக சிக்கியுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்புக்கு திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கே தூங்கியதால்  போலீசிடம் சிக்கிய சம்பவம் மும்பையில் நடந்தது.

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்துவரும் ஒருவர் அதே குடியிருப்பு பகுதியில் மற்றொரு  வீட்டை வாங்கியுள்ளார். தனது புதிய வீட்டில் சில பொருட்களை மட்டும்  வைத்துவிட்டு தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் காலை எழுந்தபோது புதிய வீட்டில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்ததை பார்த்து சந்தேகமடைந்த அவர் அங்கு சென்று பார்த்தபோது  அங்கே ஒருவர் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கபட்டு  திருடன் கைது செய்யப்பட்டான்.

விசாரணையில் அவர் மும்பை சென்ரல் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பதும் திருடுவதற்காக அங்கு  சென்றுள்ளார்  ஆனால் அங்கிருந்து வெளிநாட்டு உயர்ரக மது பானங்களை பார்த்து மயங்கி அதை குடித்துள்ளார்.  இதனால் போதை தலைக்கேற அவர் மயங்கி அந்த வீட்டிலேயே தூங்கி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |