Categories
திண்டுக்கல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெங்காய பதுக்கல்….!! அரசு அதிகாரிகள் தொடர்சோதனை

திண்டுக்கல் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா  என்று அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர்.

திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பதற்க்கு என்றே மீனாட்சிநாயக்கன்பட்டியில் தனியாக இயங்கிவரும் சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம்  இருப்பு மற்றும் விலை நிலவரம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.

Image result for வெங்காயம்

இதனை தொடர்ந்து,புதுக்கோட்டையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்,இருப்பு வைக்கப்படும் கிடங்குகளையும் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் 50டன்  வெங்காயத்திற்கு மேல் இருப்பு வைக்க கூடாது என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிகாரிகள் வெங்காய விற்பனை மையங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்

Categories

Tech |