‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டீஸரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.
உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது. இந்த திரைப்பட சீரிஸில் ‘ராக்’ எனப்படும் டுவெயின் ஜான்சனும் இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது.
‘மார்வல்’, ‘ஹாரி பாட்டர்’ போல ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்பட வரிசைக்கும் இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஒன்பதாம் பாகம் ‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ என்ற பெயரில் இங்கிலாந்தில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு லீவ்ஸ்டென்னில் உள்ள வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் வின் டீசல் சாதாரண குடும்ப உறுப்பினராக வாழ்ந்து வருகிறார். அவருக்கென்று ஒரு மகன், மனைவி என்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். வின் டீசல் தன் மகனிடம் உன் இதயத்தில் எப்போதும் நான் இருப்பேன். உன்னை எந்தவொரு ஆபத்தில் இருந்தும் காப்பேன் என்று உறுதியளிக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த வருட கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.
He’s lived his life a quarter mile at a time. The Road To #F9 Concert & Trailer Drop is this Friday at 12:00PM PT / 3:00PM ET. pic.twitter.com/YyXyGiCL1G
— The Fast Saga (@TheFastSaga) January 28, 2020