Categories
தேசிய செய்திகள்

மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின் பெயரை வைத்து அழைத்த ஆசிரியர்…. வெளுத்து வாங்கிய மாணவர்…. பரபரப்பு வீடியோ வைரல்….!!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த பயங்கரவாத தாக்குதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 166 பேர் பயங்கரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள லஸ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள்  நடத்தியுள்ளனர். இதில் 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு உடுப்பியில் உள்ள கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவரை கசாப் என்ற பெயரை வைத்து அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர் பயங்கரவாதியின் பெயரை வைத்து எப்படி என்னை அழைக்கலாம் என்று ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த பேராசிரியர் என் மகனைப் போன்றவன் நீ சும்மா விளையாட்டுக்காக தான் அப்படி சொன்னேன் என்று கூற மாணவர்  விடாது தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறிப்பு கல்லூரி நிர்வாகம் விரிவான விசாரணை நடத்தி வருகிறது.

 

Categories

Tech |