Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டீச்சருக்கு இப்படி பண்ணிட்டீங்களே…. முன்னாள் மாணவர்கள் செய்த வேலை…. 2 பேர் கைது….!!

மது குடித்து விட்டு பாட்டிலை வீசியதில் ஆசிரியர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் காளை விடும் திருவிழா நடைபெற்றுள்ளது இந்தத் திருவிழாவிற்கு சென்ற வந்த காட்பாடி அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு பள்ளியின் சுவற்றின் மீது அதை வீசியுள்ளனர். அப்போது உடைந்த பீர் பாட்டிலின் துண்டு வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஆசிரியை மீது பட்டுள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்பு அவர் காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 17 மற்றும் 19 வயதுள்ள இரண்டு முன்னாள் மாணவர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |